கோவை மாவட்டத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயம், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய் தீர்வாய அலுவலரும், நகர்ப்புற நிலவரி உதவி ஆணையாளருமான ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, தகுதியானவர்களுக்கு தேவையான சான்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு வட்டாட்சியர் சுரேஷ்குமார், தனி வட்டாட்சியர்கள் குமரி ஆனந்தன் மற்றும் சுகுணா, நில அளவை வட்ட துணை ஆய்வாளர் வடிவேல்குமார், நில அளவை வட்டசார் ஆய்வாளர் கவிதாமணி, துணை வட்டாட்சியர்கள் கருணாநிதி மற்றும் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
