முன்னாள் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, கேரளா முழுவதும் சுமார் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சோதனை நடைபெறும் இடங்களில் நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் திரண்டு, அமலாக்கத் துறையினரின் சோதனைக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்ற வாகனத்தை சிலர் சுற்றி வளைத்து கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
