தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியில், பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்தியமூர்த்தி என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்ட சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க : திமுக நிர்வாகியிடம் ரூ.2.44 கோடி பறிமுதல் : போலீசார் விசாரணை
அதிகாரிகள் மேற்கொண்ட கணக்கெடுப்பில், ஆவணங்கள் இல்லாத ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தொகை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டதா அல்லது வேறு காரணங்களுக்காக பதுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


