மேற்குவங்கத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை

மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்குப் பிறகு 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நேற்று முன்தினம் (23-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையும் படிங்க : 5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை

இந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, தேர்தல் பணியில் இருந்த சில போலீஸ் அதிகாரிகள் நடுநிலை தவறியதாக புகார் எழுந்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம்,உடனடி விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையின் முடிவில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் கராய், உட்கோட்ட அதிகாரி சஜல் மண்டல், இன்ஸ்பெக்டர்கள் மவுஷம் சக்கரவர்த்தி மற்றும் அஜய் பக், காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சுபேச்சா பக் உள்ளிட்ட 5 பேரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Latest News