துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு

‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ போன்ற படங்கள் மூலம் தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் நடிகர் துல்கர் சல்மான். அண்மையில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பிரம்மாண்டமான ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது.

தற்போது, இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 41-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு தற்போது ‘ஸ்ரீ ஸ்ரீ’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, துல்கர் சல்மானின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதனைத் கொண்டாடி வருகின்றனர்.

Related Post

Latest News