தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் மட்டும் சுமார் 14.59 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பொதுவாக வாக்களித்த பிறகு விரலில் இடப்படும் மையைக் காட்டி செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் பழக்கம் அதிகரித்துள்ளது.
தற்போது, வாக்குச்சாவடி மையத்துக்குள் இது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறி வாக்குச் சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்தால், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


