முதல் தேர்தலிலேயே வரலாற்று சாதனை : த.வெ.க வுக்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில் புதிய கட்சியான விஜய்யின் தவெக அதிக இடங்களில் முன்னிலை பெற்று அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளைப் பெற்று முதல் தேர்தலிலேயே வரலாற்று சாதனை படைத்துள்ளது. 71.97 லட்சம் வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : திமுகவுக்கு கடும் பின்னடைவு : அண்ணா அறிவாலயத்தில் கூடாரங்கள் திடீர் அகற்றம்

2021-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2.09 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 1.83 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது.

திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் சரிபாதியை தற்போது தவெக பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி விஜய்யின் தவெக 107 இடங்களிலும் திமுக 70 இடங்களிலும் அதிமுக 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

Related Post

Latest News