2026- ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை 234 இடங்களுக்கான தேர்தல் ஏப்ரல் -23 ந்தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் சார்ந்தவர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதுபோல் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக மருத்துவ அணி தொகுதி துணை அமைப்பாளர்கள் லேப் பாஷா, மெடிக்கல் காசிம் ஆகியோர் 115வது வார்டில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு வாக்களிக்க கோரி நோட்டீஸ் வழங்கினார்கள்.


