தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெயரை பயன்படுத்தி ரூ.27 லட்சம் மோசடி

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.27 லட்சம் மோசடி செய்த அரியலூரைச் சேர்ந்த முதியவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈரோட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் சீனிவாசன் (60) என்பவருடைய மகன் பொறியியல் பட்டதாரி ஆவார். தனது மகனுக்குப் பொருத்தமான வேலை தேடி வந்த சீனிவாசனுக்கு, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் (64) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

அப்போது இளஞ்செழியன், தனக்கு அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கருடன் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காட்டியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சீனிவாசன், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனது மகனுக்கு உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து ஈரோட்டில் தலைமறைவாக இருந்த இளஞ்செழியனை தனிப்படை போலீசார், நேற்று இளஞ்செழியனை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரிடமிருந்த போலி அரசு அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் முறையான விசாரணை நடத்தப்பட்ட பின், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

Latest News