திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தம்பியுடன் ஏற்பட்ட சிறிய தகராறைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுகாவிற்குட்பட்ட விருப்பாச்சி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நகுலன். இவரது 15 வயது மகள் ரிச்சியா, சத்திரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ரிச்சியாவுக்கும் அவரது தம்பி ரித்திகனுக்கும் பிஸ்கட் சாப்பிடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனவருத்தத்தில் இருந்த ரிச்சியா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
