நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10ம் தேதி விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
விஜய் பதவியேற்றது முதல் அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து அவருக்குப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில், விஜய்யின் கார் நம்பர் பிளேட் ‘TN 07 CM 2026’ என்று அமைக்கப்பட்டிருக்கும்.
தற்போது, அந்த நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு இன்று பரிசளித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
