சென்னையின் மிகவும் பரபரப்பான புறநகர் ரெயில் வழித்தடங்களில் தாம்பரம்–சென்னை கடற்கரை பாதை முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் கண்டறியப்பட்டதால், தாம்பரம்–சென்னை கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே பராமரிப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரயில் தாமதம் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.
