விஜய் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல் : தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம், செட்டிகுளம் அருகே உள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (47), தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராக செயல்பட்டு வந்தார். கட்சித் தலைவரான விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், சில மாதங்களுக்கு முன்பு உடலில் வேல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தார்.

தற்போது, விஜய் அரசியல் அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் இசக்கியப்பன், இன்று காலை தனது வீட்டின் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிய அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து மீட்டனர்.

பின்னர் பலத்த தீக்காயங்களுடன் அவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest News