தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு : வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த கூட்டணி, தமிழகத்தில் பெரியார் காமராஜரின் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வரவும், தந்தை பெரியாரின் சமூக நீதி கொள்கைகளுக்கும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு சிந்தனைகளுக்கும் வலுவான அர்ப்பணிப்புடன் செயல்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Latest News