கடந்த சில தினங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகளைப் போல மாறி அடிப்படை கட்டமைப்பை தாக்கத் தொடங்குகிறார்கள்” என தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்த சர்ச்சைக்குப் பிறகு, “கரப்பான்பூச்சி மக்கள் கட்சி” என்ற புதிய நையாண்டி அரசியல் இயக்கம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. முன்னாள் ஆம் ஆத்மி சமூக வலைதளப் பணியாளர் அபிஜீத் திப்கேவால் தொடங்கப்பட்ட இந்த நையாண்டிக் கட்சி, இரண்டே நாட்களில் 40,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிதாக வேறு ஒரு பக்கத்தைத் தொடங்கி, தங்கள் குரலை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
