கழிவுநீர் கால்வாய் அடைப்பு நீக்கம்: தவெக நிர்வாகிகள் அதிரடி நடவடிக்கை!

வேலூர் மாவட்டம், காட்பாடி மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட 6-வது வார்டு திருவள்ளுவர் நகர் இடுகாடு அருகே, நீண்ட நாட்களாகக் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் கழிவுநீர் வீடுகளின் அருகிலும், இடுகாட்டுப் பகுதியிலும் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசி வந்தது.

இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு பகுதி செயலாளர் என். பிரவீன் குமார், பகுதி நிர்வாகிகள் கே. முரளி, ஆர். ராஜன், சி. சந்தீப் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அவர்களின் உதவியுடன் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டுச் சரிசெய்யப்பட்டன.

நீண்ட நாள் கோரிக்கையை விரைந்து செயல்படுத்தித் தந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Post

Latest News