கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து, 5 கவுன்சிலர்களை இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (ஜூலை 17) மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ‘செம்மொழி பூங்கா’ அமைப்பதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் பேச முற்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் அவரைத் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இந்த வாக்குவாதம் அடுத்த சில நிமிடங்களில் கைகலப்பாகவும் மாறியது.
இதையடுத்து காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, பிரபா, சாந்தி ஆகிய 5 பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் அறிவித்தார்.
