தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு பல்வேறு கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார்.
நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரை சந்தித்தார்.
இந்நிலையில், இன்று சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான C. V. சண்முகம் அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் அவரை சந்தித்து வரவேற்றனர். இதேபோல், முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார்.
