அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க தலைமையிலான அரசு, நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில், சமீபகாலமாக அமைச்சர்களின் ஆய்வுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்கு அதிரடியான புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, திடீரென பள்ளி ஒன்றிற்குச் சென்று ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின் போது ‘கடைசி பெஞ்ச் மாணவர்கள்’ குறித்து அவர் தெரிவித்த சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டன.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் புதிய அரசுக்குத் தேவையற்ற அரசியல் தலைவலியை உருவாக்கியது.

முதலமைச்சர் விஜய் அதிரடி

இந்தச் சர்ச்சைகளுக்குத் தற்காலிகமாக மட்டுமன்றி நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய முதல்-அமைச்சர் விஜய், தற்போது அமைச்சர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். “இனிவரும் காலங்களில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே தங்களுடைய துறைக்கு உட்பட்ட அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்படாத, பிற அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளில் தலையிடவோ அல்லது ஆய்வு நடத்தவோ கூடாது. இந்த அதிரடி உத்தரவின் மூலம் அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதும், கூட்டுப் பொறுப்புடன் செயல்படும் அமைச்சரவையில் ஒருவருடைய துறையில் மற்றொருவர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

Related Post

Latest News