வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில், போதை பொருள் கடத்தலை தடுக்க தற்போது தனிப்படை போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழக – ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஒவ்வொன்றாக நிறுத்தி, சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
பயணிகளின் உடைமைகள், சந்தேகத்திற்குரிய பார்சல்கள் என அனைத்தையும் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எஸ்பி-யின் இந்த அதிரடி உத்தரவு, போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
