பயணிகள் கவனத்திற்கு., 21 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் யார்டில் பணிகள் நடைபெற்று வருவதால், ஏப்ரல் 26 முதல் மே 16 வரை புறநகர் ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரக்கோணத்தில் தினமும் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை பணிகள் நடைபெறுவதால், அந்த நேரத்தில் செல்லும் ரயில்கள் மே 17 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருத்தணியில் இருந்து காலை 9.15 மணி மற்றும் 11.10 மணிக்கு புறப்படும் அரக்கோணம் செல்லும் ரயில்களும் மே 16 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் அரக்கோணம் செல்லும் ரயில் திருவள்ளங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் செல்லும் ரயிலும் திருவள்ளங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் அரக்கோணம் செல்லும் ரயிலும் திருவள்ளங்காடு வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இதனை கருத்தில் கொண்டு பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News