பயணிகள் கவனத்திற்கு.., நெல்லை – தென்காசி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் நடைபெறும் நடைமேடை 6 தண்டவாள இணைப்பு மற்றும் யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக பல்வேறு ரெயில் சேவைகள் 19.06.2026 முதல் 30.06.2026 வரை வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் தண்டவாள இணைப்பு மற்றும் யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூன் 19 முதல் ஜூன் 30, 2026 வரை சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கோட்டை – ஈரோடு விரைவு ரயில் (16846) வழக்கமாக பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக, தென்காசி – ராஜபாளையம் – விருதுநகர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கு சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஈரோடு – செங்கோட்டை விரைவு ரயில் (16845) கோவில்பட்டி, திருநெல்வேலி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம் மற்றும் பாவூர்சத்திரம் வழியாக செல்லாமல், விருதுநகர் – ராஜபாளையம் – தென்காசி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கும் சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், செங்கோட்டை – தாம்பரம் அதிவிரைவு ரயில் (20684) ஜூன் 29 ஆம் தேதி மட்டும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி வழியாக செல்லாமல், ராஜபாளையம் – விருதுநகர் வழியாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Related Post

Latest News