சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் : இந்த நிலையங்களில் நிற்காது

சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு, ஆவடி மற்றும் பட்டாபிராம் ரெயில் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகளையொட்டி, தெற்கு ரெயில்வே சில மின்சார ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளால் சேவையில் மாற்றம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆவடி – பட்டாபிராம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக ஜூலை 2, 3, 5, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சில மின்சார ரெயில்களின் வழித்தட இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ரெயில்களில் மாற்றம்?

சென்னை சென்டிரலில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் திருத்தணி மின்சார ரெயில்

சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் அரக்கோணம் மின்சார ரெயில்

சென்னை சென்டிரலில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் மின்சார ரெயில்

சென்னை சென்டிரலில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்படும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மின்சார ரெயில்

எந்த நிலையங்களில் நிற்காது?

இந்து கல்லூரி ரெயில் நிலையம், பட்டாபிராம் ரெயில் நிலையம் ஆகிய இரண்டு நிலையங்களிலும் நிற்காமல் செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Post

Latest News