‘புலி’ பட விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ்

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ‘புலி’ திரைப்படத்திற்காக அவர் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாததைக் கண்டறிந்த அதிகாரிகள், அவருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்தனர்.

இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், மனுதாரர் தரப்பில் இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அனுமதி கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Post

Latest News