பாடல்களுக்கு உரிமை கோர முடியாது : இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய அவரது மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் (ஐகோர்ட்டு) அதிரடியாக நிராகரித்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

இளையராஜா இசையமைப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’ உள்ளிட்ட சுமார் 134 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் காப்புரிமை தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று சரிகமா நிறுவனம் வாதிட்டது. இந்த அதிரடி இடைக்காலத் தடையை ரத்து செய்யக் கோரியும், தடையை நீக்க வலியுறுத்தியும் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் சொன்னது என்ன?

இளையராஜாவின் மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, தற்போதைய சூழலில் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த உத்தரவின் மூலம், வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை, அந்த 134 படங்களின் பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும். எனவே, இளையராஜாவோ அல்லது அவரது பிரதிநிதிகளோ அந்தப் பாடல்களைப் பயன்படுத்தவோ, அவற்றின் மீது தனி உரிமை கோரவோ தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News