சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், த.வெ.க.வில் இணைந்தனர்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு த.வெ.க. உறுப்பினர்களாக இணைந்தனர்.

இந்த இணைப்பு விழாவில் சுமார் 15 ஆயிரம் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்கள் மாமல்லபுரத்திற்கு வந்திருந்தனர். இதற்காக சுமார் 200 பேருந்துகள் மற்றும் 600 கார்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News