இந்த காற்றை சுவாசித்தால் 10 சிகரெட் பிடித்ததற்கு சமம் : படுமோசமாக மாறிய பெங்களூர்

தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய மையமாக விளங்கும் பெங்களூருவில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு பொதுமக்களின் உடல்நலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது. தற்போதைய காற்று மாசுபாட்டின் தாக்கத்தால், பெங்களூருவில் வசிக்கும் மக்கள் சுவாசிக்கும் காற்று வாரத்திற்கு சுமார் இரண்டு சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

உலகளவில் மிக அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தில் உள்ளது. நகரத்தில் தினமும் சுமார் 3,000 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலுடன் சேர்ந்து காற்று மாசுபாடும் உயர்ந்து வருகிறது.

பெங்களூருவில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக, பொதுமக்கள் தினசரி சுவாசிக்கும் காற்றில் தீங்கு விளைவிக்கும் நுண்துகள்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வெளியே செல்லும் நபர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு சிகரெட்டுகளையும், ஒரு மாதத்தில் சுமார் 10 சிகரெட்டுகளை புகைப்பதற்கு நிகரான பாதிப்பை ஏற்படுத்தும் என நுரையீரலுக்கு ஏற்படுத்திக் கொள்வதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்குக் கூட, நீண்ட காலம் இத்தகைய காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவின் சில்க் போர்டு ஜங்ஷன், மெஜஸ்டிக் மற்றும் வைட்பீல்டு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளில் காற்றின் தரம் பாதுகாப்பு அளவை விட மோசமான நிலையில் பதிவாகி வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

Latest News