கேரளத்தில் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகிறது.
இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கண்ணூர் மாவட்டம் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில் தர்மடம் தன்னடா பகுதியில் வெடிகுண்டு தயாரித்து வைத்து உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


