சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் நிபுணர்கள், போலீசார் மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குஷ்பு வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த சோதனையில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், அது பொய்யான மிரட்டல் என உறுதிசெய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


