பீகார் மாநிலம், தானாபூர் பகுதியில் இருந்த பழைய ஏடிஎம் மையம் ஒன்று தற்போது சலூன் கடையாக மாறியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெளியே பார்த்தால் வழக்கமான State Bank of India ஏடிஎம் போலவே தோன்றியதால், பலரும் உண்மையிலேயே குழப்பமடைந்துள்ளனர். இந்த ஏடிஎம் பல ஆண்டுகள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இயந்திரம் அகற்றப்பட்டாலும், அதன் வெளிப்புற அமைப்பு, ஏடிஎம் போர்டு மற்றும் வங்கியின் அடையாளங்கள் அப்படியே இருந்தன. பின்னர் அந்த இடம் ஒரு சலூன் நடத்துநருக்கு வாடகைக்கு விடப்பட்டது.
இதனால், வெளியே இருந்து பணம் எடுக்க வரும் மக்கள் உள்ளே சென்றவுடன், ஏடிஎம் இயந்திரத்திற்கு பதிலாக ஹேர் கட் நாற்காலி, கண்ணாடி மற்றும் ஷேவிங் சாதனங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீடியோ அதிகமாக பகிரப்பட்டதையடுத்து, SBI லோகோ மற்றும் பெயர் பலகை பின்னர் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
