திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும், வசதிகளும் அமலுக்கு வந்துள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி, கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
விதிமுறைகளை மீறி யாரேனும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முயன்றால், அது அதிகாரிகளால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கொண்டு வரும் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கென கோவிலின் வெளிப்பகுதியில் சிறப்பு வைப்பக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
