ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ் – தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசியல் சிறப்பு பிரிவு அதிகாரியாக ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தமிழக அரசின் இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஜோதிடருக்கு அரசு பொறுப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்தன. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

தேர்தல் காலத்திலிருந்தே ரத்தன் பண்டிட் வெற்றிவேல் மற்றும் விஜய் இடையிலான நெருக்கம் குறித்து பரவலாக பேசப்பட்டது. விஜய் முதலமைச்சராக வருவார் என அவர் முன்கூட்டியே கணித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலானது. மேலும், விஜயின் ஆன்மீக பயணங்களிலும் அவர் உடன் சென்றது கவனத்தை ஈர்த்தது.

இந்த சூழ்நிலையில், எதிர்ப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.

Related Post

Latest News