‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் சாம் நீல் காலமானார்

உலகப் புகழ்பெற்ற ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் மூலம் பிரபலமான நியூசிலாந்து நடிகர் சாம் நீல், 78 வயதில் காலமானார். இந்த செய்தியை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், சாம் நீலின் மறைவு எதிர்பாராத விதமாக நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

1993-ஆம் ஆண்டு வெளியான Jurassic Park திரைப்படத்தில் பழங்கால உயிரினங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானி டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரம் மூலம் அவர் உலகளாவிய புகழைப் பெற்றார். மேலும், ஆஸ்கர் விருது பெற்ற The Piano திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் சாம் நீல், 2023-ஆம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் சிகிச்சை பெற்று, புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவர் திடீரென உயிரிழந்தது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Post

Latest News