தமிழ்நாட்டின் முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6.55 மணிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் தமிழ்நாட்டின் முதல் நபராக வாக்களித்தார்.

Latest News