கடந்த சில தினங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகளைப் போல மாறி அடிப்படை கட்டமைப்பை தாக்கத் தொடங்குகிறார்கள்” என தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்த சர்ச்சைக்குப் பிறகு, “கரப்பான்பூச்சி மக்கள் கட்சி” என்ற புதிய நையாண்டி அரசியல் இயக்கம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த அமைப்பில் இதுவரை பல ஆயிரம் இளைஞர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 41 ஆயிரம் இளைஞர்கள் இணைந்துள்ளார்களாம்.
இந்த இயக்கத்தில் சேருவதற்காக நகைச்சுவை கலந்த நான்கு தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வேலையில்லாமல் இருக்க வேண்டும், சோம்பேறித்தனமாக இருக்க வேண்டும், எப்போதும் இணையத்தில் செயல்பட்டு கொண்டிருக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு மாநிலங்களவை பதவி வழங்க தடை, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, கட்சித் தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்களுக்கு நீண்டகால தேர்தல் தடை போன்ற வாக்குறுதிகளும் உள்ளது.
இந்த இயக்கத்திற்கு சமூக வலைதளங்களில் வேகமாக ஆதரவை பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
