80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படையினர் மற்றும் டெல்லி காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க : முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்!

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், செங்கோட்டை சென்ற பிரதமர் மோடி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, தனது சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Post

Latest News