இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
இந்தோனேசியாவில் நாகேகியோ மற்றும் பீமா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை 4.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் ஒரு நிமிடம் வரை நில அதிர்வுகள் மிகக் கடுமையாக உணரப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி அபாயம் நீங்கியதால் எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டது.
