Vivo நிறுவனம் தனது S Series ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதில் முதல் மாடலாக Vivo S2 5G வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போன் Android 16 இயங்குதளத்தில் இயங்கும் என்றும், 8GB RAM கொண்ட மாடல் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
- 6.83-இன்ச் 1.5K Curved POLED Display
- 120Hz Refresh Rate
- MediaTek Dimensity 7360 Processor
- Android 16
- 8GB RAM (Geekbench பட்டியல்)
- 7,050mAh Battery
- 44W Fast Charging
சீன சந்தையில் Vivo ஸ்மார்ட்போன்கள் பொதுவாக OriginOS-உடன் வெளியாகின்றன. ஆனால் இந்தியாவில் வெளியாகும் Vivo போன்கள் பெரும்பாலும் Funtouch OS-உடன் அறிமுகமாகின்றன. எனவே, Vivo S2 இந்திய பதிப்பில் OriginOS-க்கு பதிலாக Funtouch OS வழங்கப்பட வாய்ப்புள்ளது.
Vivo S2 5G இந்தியாவில் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரையிலான விலையில் அறிமுகமாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதை Vivo அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
