7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை

மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் நுரையீரலில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பேனாவின் மூடி சிக்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இதனை காசநோய் (TB) மற்றும் ஆஸ்துமா என தவறாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சிறுமிக்கு தொடர்ந்து இருமல் ஏற்பட்டுள்ளது. மேலும், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, சிறுமிக்கு சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது, நுரையீரலை ஆய்வு செய்தபோது, மூச்சுக்குழாய் பகுதியில் பேனாவின் மூடி சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

பேனா மூடி மிகவும் ஆழமாக சிக்கியிருந்ததால், அதை அகற்ற தீவிர சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், ஒருவழியாக பேனாவின் மூடி அகற்றப்பட்டது. ஆனால் கடுமையான தொற்று மற்றும் சேதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக நுரையீரலின் சுமார் மூன்றில் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர்களின் தகவலின்படி, தற்போது சிறுமி நலமாக உள்ளார்.

Related Post

Latest News