முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் படத்தை திருவிழாபோல கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் நாள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜனநாயகன் படம் உலகளவில் ₹78.27 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் ₹48.27 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ₹24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
