ஜனநாயகன் படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் பர்வேஸ்

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை புதுக்கோட்டை விஜய் திரையரங்கில் இன்று காலை முதல் காட்சியை மாநிலத் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பார்த்தார்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

Latest News