டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு: வேலூரில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து டெல்லியில் போராடிவரும் இளைஞர்களுக்கு ஆதரவாக வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும், டெல்லியில் போராடிவரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கும், இளைஞர்களுக்கு ஆதரவாகவும், டெல்லியில் போராடுபவர்கள் மீது நடத்தப்படும் தடியடியை கண்டித்தும் காட்பாடியில் உள்ள வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது? யார் காரணம்? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனை பேரை கைது செய்துள்ளார்கள்? தடியடிக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் யார்? என்பது குறித்து முழுமையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வால் உயிரிழந்த அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர். மேலும் இதற்க்கு மத்திய அரசு உரிய தீர்வு காணாத வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Related Post

Latest News