கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

உரிய விசா இல்லை என கூறி கேரள தம்பதியினரின் 6 மாத குழந்தையை விமானத்தில் ஏற்ற மறுத்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 6 மாத குழந்தை உட்பட இரண்டு சிறு குழந்தைகளுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் தனது குடும்பத்திற்கு கடுமையான மனஉளைச்சல், உணர்ச்சி ரீதியான பாதிப்பு மற்றும் கூடுதல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாக கூறினார்.

இது குறித்து, நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், ரூ.25,000 வழக்கு செலவும் வழங்க 45 நாட்களுக்குள் Qatar Airways நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் தொகை வழங்கப்படாவிட்டால், புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆண்டுக்கு 9% வட்டி செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Post

Latest News