எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் வெளியாகவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை.
பின்னர் ஒருவழியாக ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்படம் வருகின்ற ஜூலை 23ம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் தயாரக உள்ளனர். முன்பதிவு படுவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது : “இது விஜய் சார் நடித்த கடைசி திரைப்படமா என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இது முதல்வர் விஜய்யின் முதல் படம் என்று சொல்லலாம்.
ஜனநாயகன் படத்திற்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது எங்களுக்கு வருத்தம். இந்த சான்றிதழ் காரணமாக குழந்தைகள் திரைப்படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘A’ சான்றிதழுக்கு எதிராக போராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் படம், TVK-வை புகழ்வதற்காக உருவாக்கப்படவில்லை என்றும், விஜய்யை புகழ்ந்து பேசும் நோக்கத்திலும் எடுக்கப்படவில்லை என்றும் ஹெச். வினோத் விளக்கமளித்தார். மேலும், ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்று இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார்.
