நடிகர் சதீஷின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானார்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சதீஷ். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, ரெமோ, மிஸ்டர். லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், அவரது தந்தை வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சதீஷின் தந்தையின் உடல், சென்னை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Post

Latest News