திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, திருச்சி வழியாக இயக்கப்படும் பல பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி – காரைக்கால் டெமு ரெயில் (76820) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை முழு வழித்தடத்தில் இயங்காது. இந்த ரெயில் திருச்சியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோல், திருச்சி – மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (56700) குறிப்பிட்ட காலத்தில் திருச்சியிலிருந்து ஆடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும்.
காரைக்குடி – மயிலாடுதுறை பாசஞ்சர் டெமு ரெயில் (56836) ஜூலை 23 முதல் 26 வரை காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே சேவையளிக்கும்.
மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ் (16811) ஜூலை 22, 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12663) ஜூலை 25 அன்று கன்னியாகுமரியிலிருந்து சந்தராகச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் – திருச்சி டெமு ரெயில் (76819) ஜூலை 22 முதல் 31 வரை காரைக்காலில் இருந்து இயக்கப்படாமல், திருவாரூரிலிருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.
மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16847) குறிப்பிட்ட நாட்களில் ஆடுதுறையிலிருந்து தனது பயணத்தை தொடங்கும்.
சேலம் – மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (16812) ஜூலை 22, 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் கரூரிலிருந்து மதியம் 3.40 மணிக்கு இயக்கப்படும்.
ஹவுரா – திருச்சி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஜூலை 26 அன்று சந்தராகச்சியில் இருந்து மாலை 5.41 மணிக்கு புறப்பட்டு இயக்கப்படும்.
