கேரளத்தில் தாய்-மகன் இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சுதாகரன் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் கடந்த 2025 ஜனவரி 27-ஆம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 61) என்று முதியவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், செந்தாமரை ஏற்கனவே சுதாகரனின் மனைவி சஜீதாவை கொலை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றிருந்தது தெரியவந்தது.

அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பின்னர், பழிவாங்கும் நோக்கில் சுதாகரன் மற்றும் அவரது தாயார் லட்சுமியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கியது. அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, கடந்த வாரம் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.

அதனைத் தொடர்ந்து, செந்தாமரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இன்று தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், செந்தாமரைக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News