ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் வெளியாகவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை.

பின்னர் ஒருவழியாக ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்படம் வருகின்ற ஜூலை 23ம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் தயாரக உள்ளனர். முன்பதிவு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

திரைப்படம் வெளியாகும் முன்பே, படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாட தயாராக இருப்பதை முன்பதிவுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

முன்பதிவில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, முதல் நாள் முன்பதிவு மூலமாக இந்திய அளவில் படம் சுமார் ரூ.9.58 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

முதல் நாள் முன்பதிவு வசூலில் ‘கருப்பு’ திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி, 2026-ஆம் ஆண்டில் அதிக முன்பதிவு பெற்ற தமிழ் திரைப்படமாக ‘ஜனநாயகன்’ உருவெடுத்துள்ளது.

Related Post

Latest News