சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்காக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் புதிய பேருந்துகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள நிறங்கள் த.வெ.க கொடி நிறத்தில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இருப்பினும், இந்த புகைப்படங்கள் தொடர்பாக இதுவரை தமிழக அரசு அல்லது மாநகர போக்குவரத்து கழகம் அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை.
ஒரு தரப்பினர், இது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களை வைத்து அரசுப் பேருந்துகளை தயார் செய்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், இந்த நிற அமைப்பு புதியது அல்ல என்றும், தமிழகத்தில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட சில அரசுப் பேருந்துகளிலும் இதேபோன்ற வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
