முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ கைது

முதலமைச்சர் விஜயை குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக சார்பில் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் விஜய் குறித்து அவர் பேசியது மிரட்டல் விடுக்கும் வகையிலும், அரசியல் நாகரிகத்திற்கு முரணான வகையிலும் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து, மார்க்கண்டேயனின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் இல்லத்துக்குச் சென்று அவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

Latest News